📅 வைகுண்ட ஏகாதசி தேதி: டிசம்பர் 30, 2025 (செவ்வாய்க்கிழமை)
🔓 சொர்க்கவாசல் திறப்பு: அதிகாலை 5:45 AM IST
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா 22 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதில் பகல் பத்து மற்றும் ராப்பத்து உற்சவங்கள் மிக முக்கியமானவை.
💎 முக்கிய சேவை விபரங்கள்
- ⚪ மூலவர் முத்தங்கி சேவை: மூலவர் பெரிய பெருமாள் (ஸ்ரீ ரங்கநாதர்) டிசம்பர் 20, 2025 முதல் ஜனவரி 8, 2026 வரை முத்து கவசத்தில் காட்சியளிப்பார்.
- ✨ ரத்தினாங்கி சேவை: வைகுண்ட ஏகாதசி அன்று உற்சவர் ஸ்ரீ நம்பெருமாள் வைரங்கள் பதித்த ரத்தினாங்கி கவசத்தில் எழுந்தருளி சொர்க்கவாசல் கடந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
🚪 சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நேரங்கள்
ராப்பத்து உற்சவத்தின் போது 9 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும். அதன் நேர விபரங்கள் இதோ:
| தேதி | விழா நாள் | திறப்பு நேரம் |
|---|---|---|
| டிசம்பர் 30, 2025 | வைகுண்ட ஏகாதசி (ராப்பத்து முதல் நாள்) | 🕒 அதிகாலை 5:45 - இரவு 10:00 |
| டிசம்பர் 31 - ஜனவரி 4 | ராப்பத்து 2-ஆம் நாள் முதல் 6-ஆம் நாள் வரை | 🕒 மதியம் 1:00 - இரவு 8:00 |
| ஜனவரி 5, 2026 | திருக்கைத்தல சேவை (7-ஆம் நாள்) | 🕒 மாலை 4:00 - இரவு 10:00 |
| ஜனவரி 6, 2026 | வேடுபறி (8-ஆம் நாள்) | 🚫 சொர்க்கவாசல் திறப்பு கிடையாது |
| ஜனவரி 7, 2026 | ராப்பத்து 9-ஆம் நாள் | 🕒 மதியம் 1:00 - இரவு 8:00 |
| ஜனவரி 8, 2026 | தீர்த்தவாரி (10-ஆம் நாள்) | 🕒 காலை 10:30 - இரவு 9:00 |
🗓️ முக்கிய திருவிழா நாட்கள் (விசுவாவசு வருடம்)
- டிசம்பர் 19, 2025: திருநெடுந்தாண்டகம் - (வெள்ளிக்கிழமை) - (இரவு 7:00 மணி)
- டிசம்பர் 20, 2025: பகல் பத்து உற்சவம் ஆரம்பம் - (சனிக்கிழமை) - (புறப்பாடு காலை 7:00 மணி)
- டிசம்பர் 29, 2025: மோகினி அலங்காரம் (நாச்சியார் திருக்கோலம்) - (திங்கட்கிழமை) - (காலை 6:00 மணி)
- டிசம்பர் 30, 2025: வைகுண்ட ஏகாதசி - (செவ்வாய்க்கிழமை) - ரத்தினாங்கி புறப்பாடு அதிகாலை 4:30 மணி; சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை 5:45 மணி
- ஜனவரி 5, 2026: (திங்கட்கிழமை) - மாலை 6.00 மணி - 6.15 மணி - திருக்கைத்தல சேவை - நம்மாழ்வார் மோகினி அலங்காரத்தில்
- ஜனவரி 6, 2026: வேடுபறி - நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் - (செவ்வாய்க்கிழமை) - (மாலை 5:00 மணி)
- ஜனவரி 8, 2026: (வியாழக்கிழமை) - காலை 11.00 மணி - தீர்த்தவாரி
- ஜனவரி 9, 2026: நம்மாழ்வார் மோட்சம் - (வெள்ளிக்கிழமை) - (காலை 6:00 மணி - 7:00 மணி)
❓ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
2025-ல் வைகுண்ட ஏகாதசி எப்போது வருகிறது?
2025 ஆம் ஆண்டில் டிசம்பர் 30-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.
ஏன் வேடுபறி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுவதில்லை?
வேடுபறி தினத்தில் (ஜனவரி 6, 2026) குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்வு நடைபெறுவதால் அன்று சொர்க்கவாசல் திறக்கப்படாது.
அடுத்த வருடம் வைகுண்ட ஏகாதசி எப்போது?
அடுத்த ஆண்டு (2026-2027) வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 20, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வருகிறது.
⚠️ குறிப்பு: கோவில் நிர்வாகத்தின் முடிவுகளுக்கு ஏற்ப திருவிழா நேரங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
0 Comments